‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ் குடி’ என்பார்கள். இந்தியாவில் பல மொழிகள் பரவலாக பேசப்பட்டு வந்தாலும், நம் தாய்மொழியான தமிழுக்கே செம்மொழி என்ற சிறப்பும் அங்கிகாரமும் முதல் முதலாகக் கிட்டியது நாம் அனைவரும் அறிந்ததே.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துபோன குமரி கண்டத்தோடு தமிழ்மொழிப் பொக்கிஷங்களும் தமிழர் நாகரீகப் புதையல்களும் மூழ்கிப்போன சான்றுகள் பலவும் நம் வரலாற்று அறிஞர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆயினும், நம் மொழியின் சிறப்புகள் நம்மவர்களில் பலருக்கு இன்னும் தெரியவில்லை என்பது கவலைக்குரிய ஒன்றே.

நண்பர்களே, இனியும் தாமதிக்க வேண்டாம். காலம் கடந்தும் மாறாத இனிமையுடனும் மங்காத பொலிவுடனும் வீரநடைப் போட்டுக்கொண்டிருக்கும் நம் தாய்மொழியின் வரலாற்றுக் கூறுகளையும் சிறப்புகளையும் இந்த காணொலி வழி தெரிந்துகொள்ளுங்கள்:

Photo Credit: Rocket Tamilan